வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி ஏகாதசி திதியை முன்னிட்டு வருகிற 09.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நிம்மதியான தூக்கம் வேண்டியும்,துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும் மேலும் ஏராளமான நன்மைகள் பெற நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லி பொடி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை;ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு. அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்ற ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. ஏகாதசியில் விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும்.
ஏகாதசி அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப்பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். ஏகாதசியில் இறைவனை வழிபடுபவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் மேலும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெருவதிற்கு உண்டான தடைகள் நீங்கி சகல சம்பத்துடன் நோய் நொடிகளின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இத்தகைய சிறப்புகள் பொருந்திய ஏகாதசி திதியில், வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், நிம்மதியான தூக்கம் வேண்டியும், துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும்,வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 09.09.201 9 திங்கள்கிழமை காலை 10.00ணியளவில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லி பொடி திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்,நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.