இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள் என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன் வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில் பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!
இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும் ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான்.
ஒன்றென ஒருவராக உள் வந்து அமர்ந்தார். இன்று ஓங்கி உயர்ந்த ஒரு பீடத்தையே தனக்கென ஸ்தாபித்துக் கொண்டு விட்டார். தேசமெங்கும் இவருக்கும் பக்தகோடிகள். உலகெங்கிலும் இருந்து இவரை தரிசிக்க அன்பர்கள் தேடி வருகிறார்கள்.
இந்த தன்வந்திரி பகவான் மூலவராக இங்கே பிரதிஷ்டை ஆவதற்கு முன் எத்தனை லட்சம் கி.மீ. தொலைவு பயணம் செய்தார்... எத்தனை புனித க்ஷேத்திரங்களை தரிசித்திருக்கிறார்... கங்கை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற எத்தனை புண்ணிய நதிகளில் தீர்த்தமாடி இருக்கிறார்... எத்தனை புராதனமான இடங்களுக்கு யாத்திரை (கரிகோலம்) சென்று வந்திருக்கிறார் என்பன போன்ற விவரங்கள் எல்லாம் கேள்விப்படுகின்ற பக்தர்களுக்கு ஆச்சரியமூட்டுபவை. கரிகோலம் போன விவரமும், அப்போது பக்தர்களின் குடும்பங்களில் இவர் நிகழ்த்திய அற்புதங்களும் பரவசப்பட வைக்கும். இவை எல்லாம் முறையான நூலாக வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கிடைக்கின்றன. பீடத்துக்கு வருகிற பக்தர்கள் இது தொடர்பான நூல்களை அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.
மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவான் இங்கே பிரதிஷ்டை ஆன பின், அடுத்தடுத்து இங்கே பக்தர்கள் கைப்படை எழுதிய மந்திரங்களுடன் பிரதிஷ்டை ஆகி இருக்கிற பெரும்பாலான விக்கிரகங்களும் இதுபோல் தேசத்தின் பல பகுதிகளுக்கு கரிகோலம் சென்று அதன் பின்னர்தான் பிரதிஷ்டை ஆகி உள்ளன.
என்றாலும், பக்தனை தேடி பகவானாக இங்கே பீடத்தில் இருக்கின்ற ஸ்ரீதன்வந்திரி பகவான் உத்ஸவர் விக்கிரகம் இன்றைக்கும் பல வெளியிடங்களுக்கு பக்தர்களின் அழைப்பின்பேரில் அடிக்கடி சென்று வருகிறார். தன்னை விரும்பி அழைக்கின்ற பக்தர்களின் குடும்பங்களுக்கு நல்லாசிகளை வழங்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு பக்தர் உடல் நலம் குறைந்து காணப்பட்டபோது ஸ்ரீதன்வந்திரி பகவான் உத்ஸவரைத் தங்கள் இல்லத்துக்கு வரவழைத்து, ஒரு ஹோமம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி தன்வந்திரி பீடத்து சேவகர்கள் ஸ்ரீதன்வந்திரி பகவான் உத்ஸவரை அவர்களின் இல்லத்துக்கு அழகாகக் கொண்டு சென்றார்கள்.
ஸ்ரீதன்வந்திரி பகவானை அவர்களின் இல்லத்தில் வைத்து, மலர் அலங்காரம் செய்து விசேஷ வழிபாடும் ஹோமமும், நெல்லிக்காய் பொடி மற்றும் பலவகையான மூலிகை தீர்த்தங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கபட்டது. அடுத்தடுத்து வந்த நாட்களில் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளுடனும், ஸ்வாமிகளின் ஆசியுடன் இறைபிரசாதத்தாலும் அவரது பூர்வ ஜன்ம பலத்துடனும் நன்றாகவே தேறி இருந்தார் என்பது அவரது அருள். நம்பிக்கையுடன் இவரை அழைத்து பூஜித்தால், எப்போதும் கைவிட மாட்டார். அதன் பின் அவர் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு வருகை புரிந்து தன் நன்றியை வெளிப்படுத்தினார். இதுபோன்று ஏராளமான நிகழ்வுகள் தன்வந்திரி பீடத்தில் நித்தமும் நடைபெற்று வரும் அபிஷேகங்கள், ஹோமங்களில் பங்கேற்று பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் வருகிற 26.02.2018 திங்கட் கிழமையில் மாசி மாத ஏகாதசி திதியை முன்னிட்டு, புனர்பூச நட்சத்திரத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், விவாகம், சீமந்தம், கிரக பிரவேசம், புதிய வியாபாரம் தொடங்கவும், அதிகார பதவிகள் கிடைக்கவும் வேத சாஸ்திரங்களை பயிலவும் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் பொடிகொண்டு மஹா அபிஷேகம் நடைபெறவுள்ளது.
ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத பிரசாதம்