ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி
ஸ்ரீ பிரத்தியங்கிரா சரபேசுவரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள். நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள். அவள் ஆயிரம் முகங்கள் இரண்டாயிரம் கைகள் சிவப்பேறிய மூன்று கண்கள் கரியநிறம் மிகப்பருத்த சரீரம் பெருங் கழுத்து நீலநிற ஆடையுடன் அருள்பவள் உக்ர பிரதியங்கிரா தேவி. தேவி சாந்தம் அடைய சரபரும் தேவர்களும் ரிஷிகளும் எல்லோருமே துதித்தனர். அவள் விஸ்வரூபம் அடங்கி மகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள். சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணிலிருந்தும் தோன்றியவள் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி மகா பிரத்யங்கிரா தேவி. சந்திர கலை சிரத்தில் பிரகாசிக்க சூலம் பாசம் டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திவாறு பக்தர்களுக்கு அருள் புரிபவள்.
யக்ஞ ஸ்வரூபினி ஐஸ்வர்ய பிரத்தியங்கிராதேவி
அருள்மிகு யக்ஞ ஸ்வரூபினி ஐஸ்வர்ய பிரத்தியங்கிராதேவி பீடம், கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை. அம்பாள் பிரத்யங்கிராதேவி மூலவர் மரகதேஸ்வரர் அம்பாள் மரகதாம்பிகை முகம் சிம்ம முகம் திக்கெங்கும் ஹோமப்புகை. சிறப்பு ப்ரத்யங்கிரா யாகம் - நிகம்பலயாகம் ஸ்தல விருட்சம் புன்னை மரம்.
6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மாபெரும் நிகும்பல யாகம்
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு