On 28th October -International ayurveda day is celebrated on account of Lord Dhanventri jayanthi

தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மனையின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

பக்க விளைவுகள் இல்லாத இந்த அயுர்வேத மருத்துவ சிகிச்சை மக்கள் மத்தியில் பிரபலம் பெற்று வருகிறது. பாமரர்கள் முதல் செல்வந்தர்கள் வரை ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறி வருகின்றனர். ஆங்கில மருத்துவம் போன்றே இங்கும் பல்வேறு நோய் சிகிச்சை பிரிவுகள் உள்ளது. பக்க விளைவுகள் கிடையாது என்பதுடன் சில நோய்களுக்கு பிற மருத்துவத்தில் இல்லாத சிகிச்சை கூட ஆயுர்வேதத்தில் உள்ளதால் இம்மருத்துவ முறைக்கு மாறி வரும் நோயாளிகளின் என்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனலாம்.

மத்திய, மாநில அரசுகள் ஆயுர்வேத மருத்துவர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு, முதுகலை படிப்பு போன்றவற்றை ஏற்படுத்தி தருவதுடன், இதற்காக சர்வதேச தினம் கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்தவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிசீலணை செய்து, ஆயுர் வேத மருத்துவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக மத்திய அரசு வருகிற 28ம் தேதி கொண்டாட உத்தரவு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சர்வதேச ஆயுர்வேத தின கொண்டாட்டம் பெருமளவில் வெற்றி பெற பீடத்தின் சார்பாக, இந்த வருடம் முதல் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடத்த உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தன்வந்திரி ஜெயந்தியின் சிறப்பு

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்

திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாயத்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்த.

உலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில்காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் மூலவர் தன்வந்திரிக்கு பால் தயிர்,மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிருதம்,நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, இவற்றுடன் 108 மூலிகை திரவியங்களை கொண்டு பிரத்தியோகமாக தயாரித்த மூலிகைப்பொடிகளினால் மஹா திருமஞ்சனமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது.

தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை திருமதி.நிர்மலா முரளிதரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்வந்திரி மந்திரம் ஜபம் செய்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு S.A. ராமன் அவர்கள் துவக்கி வைத்து ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை சிறப்புரையாற்றினார். இம் மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக மகாலட்சுமி காலேஜ் நிர்வாகி டாக்டர் திரு.பாலாஜி அவர்களும் மற்றும் R.I.T. கல்லூரி சேர்மன் திரு. போஸ் அவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களிலிருந்து வருகை புரிந்த ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை எடுத்துறைத்தனர் ,.இம் மருத்துவ முகாம் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் R.M.O. டாக்டர்.திருமதி. மீரா சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது ,. .இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவ ஆலோசனை பெற்று இலவசமாக மருந்து மாத்திரைகளை பெற்று பயன் பெற்றனர்.

இந்த முகாம் நாளையும் நாளை மறுநாளும் காலை 10.00 மணிமுதல் நண்பகல் 2.00 மணிவரை நடைபெறுகிறது. என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images