வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 29.10.2016, சனிக் கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு ஸ்ரீ துர்கா ஹோமமும் , சிறப்பு பூஜைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவ சக்தி அருளால் கீர்த்தி புகழுடன் வாழவும், நம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை நிவர்த்தி செய்வதற்காகவும், தீய மோகத்திலிருந்து விடுபடவும், உலக அமைதிக்காகவும் இந்த துர்கா ஹோமம் செய்யப்படுகிறது. தீபத் திருநாளான, தீபாவளித் திருநாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த புனித ஹோமத்தில் எண்ணற்ற சிகப்பு நிற பழங்கள், சிகப்பு மிளகாய் வத்தல், பல வகையான சிகப்பு புஷ்பங்கள், பூசனிக் காய்கள், நவ தானியங்கள், பட்டு பீதாம்பரங்கள் மற்றும் விஷேச திரவியங்கள்சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும், ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version