Panchamuga Varahi Homam

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தி 5ம் நாளான  நாளை 30ம்தேதி வெள்ளிக்கிழமை  ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது.

மேலும் வளர்பிறை பஞ்சமி, லலிதா பஞ்சமி,  நவராத்திரி ஆகியவற்றை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு , வராஹி ஹோமம், சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக  மாலையில்  வராஹி அம்மனுக்கு 1000 நுனி வாழை இலைகளில் , அரிசி, பூ, மஞ்சள்,குங்குமம், தாம்பூலம் வைத்து 2000 தேங்காய்களில் நெய் தீபமும், 1000 எலுமிச்சம்  பழங்களில் நல்எண்ணெய் தீபமும்  என வராஹி தீபம் ஏற்றப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images