Panthakkal Muhurtham

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும்நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு திருமணம் நாம் செய்து வைப்போமோ அவ்வகையில் பசு என்றழைக்கும் கோ லஷ்மிக்கும் காளை என்று அழைக்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணத்தை தன்வந்திரி குடும்பத்தினர் முறையாகவும் வைபவமாகவும் நிகழ்த்த உள்ளார்.

மேற்கண்ட வைபவத்திற்காக இன்று 16.07.2017 ஞாயிற்று கிழமை காலை 7.00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்மும் 8.00 மணிக்கு ஸ்ரீ முனீஸ்வரருக்கும், நவகனியருக்கும்,விஷேச அபிஷேகத்துடன் பொங்கல்வைத்து குல தெய்வ கிராம தெய்வ வழிபாடும் 9.30 மணியளவில் சுமங்கலி பூஜையும் 10.00 மணிக்கு கந்தர்வராஜ பூஜையும் நடைபெற்றது. 11.00 மணியளவில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம் மற்றும் சௌபாக்ய பொருட்கள் மணிக்கு தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி தீபம், கோடி அர்ச்சனையில் சௌபாக்ய பொருட்களுடன் மாங்கல்யம் வைத்து மாங்கல்ய பூஜையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வருகிற 20.07.2017 மாலை 6.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 108 வகையான பொருட்களுடன் 7.30 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பும் இரவு 8.00 மணிக்கு சிறப்பு விருந்தும் நடைபெற்று மாங்கல்யதாரணம் மறுநாள் 21.07.2017 ஆடி முதல் வெள்ளிக் கிழமை சிறப்பு ஹோமங்களுடன் காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கோ லஷ்மிக்கும் ரிஷபராஜா என்கிற நந்திகேசனுக்கும் நடைபெற்று 10.30 மணிமுதல் 12.00 மணிவரை 150 மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் நிகழ்ச்சியும் சிறப்பு திருமண பிரசாதமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. .இந்த வைபவத்தில் ஏராளமான மடாதிபதிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் 48 ஆயிரம் ரிஷிகள் அஷ்டவசுக்கள், மற்றும் நவகிரகங்களின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் ஆசிகளையும் பெற உள்ளனர்.இந்த வைபவத்தில் அனைவரும் பங்கேற்று ஆசிபெற ஆரோக்ய பீடம் அன்புடன் அழைக்கிறது.​

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images