Pavithrotsava Festival Started

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 08.07.2019 திங்கள்கிழமை காலை10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆனி மாத ஷஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரன் சன்னதியில் சத்ருசம்ஹார சுப்ரமண்ய ஹோமமும், துஷ்ட கிரக தோஷ நிவர்த்தி பூஜையும், ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்புஅபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

வினை தீர்க்கும் வேலவனாகும் ஸ்ரீ முருகபெருமானுக்கு உரிய சிறப்பான தினமாகும் சஷ்டி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஹோமங்களிலும் பூஜைகளிலும் வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பலவிதமான நன்மைகளை பெறவும், காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து,தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழவும் ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றி தூய்மையை அடையவும், குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும், உயிர் உணர்ச்சி வளரவும், இரத்த சம்பந்தமான நோய்கள், நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்படவும், அந்நோய்களுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்கவும், மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிடைக்கவும், சந்தான பிராப்தி உண்டாகவும், சத்ரு தொலைகள் அகலவும் பக்தர்கள் பங்கேற்று கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று 08.07.2019 திங்கள்கிழமை முதல் 11.07.2019 வியாழக்கிழமை வரை பீடத்தில் நடைபெறும் பவித்ரோத்ஸவ விழாவின் பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images