Pavithrotsavam and Sudarshana Jayanthi Festival

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சென்ற 08.07.2019 திங்கள்கிழமை முதல்வருகிற 11.07.2019 வியாழக்கிழமை வரை நடைபெறும் பவித்ரோத்ஸவத்தின் நான்காவது கால ஹோம பூஜைகள்இன்று 10.07.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்யாக வாசனம், வேதபாராயணம், சகல தேவதா ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ர மாலைகள் சார்த்தி மஹா தீபாராதனை போன்ற ஹோம பூஜைகளுடன் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை ஐந்தாவது கால ஹோம பூஜைகள் நடைபெறஉள்ளது. மேலும் இன்று ஸ்ரீ சுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மஹா சுதர்சன ஹோமமும், விசேஷ திருமஞனம்,ஆராதனைகள் நடைபெற்றது.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு,மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

மேலும் இப்பூஜைளில் உங்களைச் சூழ்ந்துள்ள இருளும், அறியாமையும் விலகவும், நேர்மறை ஆற்றல் கிடைக்கவும், நன்மைகள் பெருகி, நல்வாழ்வு வாழ அமையவும், சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை நீங்கவும், எதிர்மறை எண்ணங்கள் விலகவும், துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகவும், எதிரிகள் தொல்லை விலகவும், பயம் நீங்கி வலிமை கிடைக்கவும், நடைமுறையில் நல்ல மாற்றங்கள் நிகழவும்,தன்னம்பிக்கை பிறக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும், வழக்கில் வெற்றி அடையவும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகவும் பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images