காஞ்சி காமகோடி சங்கரமடத்தின் 69 ஆவது பீடாதிபதி, ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்று 28.02.2018 காலை ஸ்ரீ காமட்சி அம்பாளின் திருவடி அடைந்தார்.
காஞ்சி சங்கரமடம் தென்னிந்தியாவின் மிகபெரிய சமஸ்தானம், இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் மேலைநாட்டினரும் வருகைபுரிந்து ஸ்வாமிகளின் ஆசிபெற்று வருகின்றனர். பல லட்ச கணக்கான பக்தர்களின் இதயத்தில் இடம் பிடித்தவரும், ஆன்மிகத்தின் வாயிலாகவும், வேதங்களின் மூலமாகவும், பல சேவைகளை செய்து வந்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தன்வந்திரி பீடத்தின் சார்பிலும், தன்வந்திரி குடும்பத்தின் சார்பிலும் தெரிவித்துகொள்கிறோம்.<\p>
அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும், அவரை இழந்து வாடும் அவருடைய பக்தர்கள், பணியாளர்கள், சேவகர்கள் மன அமைதி பெறவும், இன்று காலை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் தன்வ்ந்திரி குடும்பத்தினர்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள், சேவார்த்திகள் மற்றும் பலர் ஒன்று கூடி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version