நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ருதேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும். ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப்போவதில்லை. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல எல்லா அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும். ஒரு வேளை முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள், ஆடி, அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் மஹாளாய அமாவாசையன்று பித்ரு தோஷ /திலஹோமம் பரிகாரங்கள் செய்வது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
புரட்டாசி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு 30/09/2016 அன்று வரும் மஹாளாய அமாவாசை தினத்தில் பித்ரு தோஷ /திலஹோமம் நிவாரண பூஜைகள் செய்து, பித்ருக்கள் திருப்தி அடைய வும், அவர்களின் பரிபூர்ண ஆசி பெறவும் பக்தர்களின் விருப்பத்திற்காகவும் பித்ரு தோஷ /திலஹோமம் நிவாரண பூஜைகள் செய்ய ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஹோமம் பரிகாரம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் செய்ய தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,வாலாஜாபேட்டை 632513 வேலூர் மாவட்டம். www.tn.danvantritemple.org