Pradosham 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நாளை 17.02.2019 தேதி மாசிப் பிரதோஷம், மாலை 5.00 மணியளவில் ஞாயிறுப் பிரதோஷம் நடைபெற உள்ளது. ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஆதாரபீடத்தில் நந்தியுடன் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரை பக்தர்கள் ஏக காலத்தில் தரிசித்து தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூவும், பாவங்களை நீக்கி, புண்ணியங்களைத் தந்தருளும். ஈஸ்வரரின் பரிபூரண அருளைப் பெற்று, ஞான யோகத்துடனும் வாழவும் பிரதோஷ பூஜை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். அதேபோல் சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷமும் சிறப்பு வாய்ந்தது.

நாளை ஞாயிற்றுக்கிழமை 17.02.2019 பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். இப்படி ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானது.

பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் வேளையில், சிவனுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் நாளை ராகுகாலத்தின் போது தன்வந்திரி பீடத்தில் உள்ள 9 அடி மஹிஷாசுர மர்த்தினிக்கு நெய்விளக்கு ஏற்றி, 27 நக்ஷத்திரங்கள் 9 நவக்கிரகங்களுக்குறிய விருட்சங்களை கொண்டு அமைந்துள்ள காலச்சக்கிரத்தை வலம் வந்து வழிபடுவதும், பிரார்த்தனை செய்வதும் விசேஷம். அதனை தொடர்ந்து ஏகரூப சரீரமாக உள்ள ராகு – கேதுவை வணங்கி வழிபடுவது, ராகு கேது தோஷங்களைப் போக்கி பயம் நீங்கியும், சகல பாப தோஷம் நீங்கியும் கல்வி, உத்தியோகம், தொழில் மற்றும் சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்களை பெற்று நலமாக வாழலாம்.

மேலும் பிரதோஷ பூஜைக்கு தேவையான வில்வம், செவ்வரளி, அருகம்புல் மற்றும் பல பூஜை பொருட்கள், நிவேதன பொருட்கள், ஹோம பொருட்கள், அபிஷேக பொருட்கள் அளித்து குடும்பத்தில் சுபிட்சம், குடும்ப ஒற்றுமை, குழந்தைகள் ஆரோக்யத்துடன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இப்பூஜைகளில் பங்கேற்று ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான் அருளுடன் 75 பரிவார மூர்த்திகளின் அருளுக்கு பாத்திர தாரர்களாக பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images