Pratyangra Devi Homam and Abhishekam

வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திர் ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நாளை 19.07.2019 ஆடி முதல்வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும், ப்ரத்யங்கிரா தேவிக்கு மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

ஆடி வெள்ளியும் சூலினி யாகமும் :

ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து அம்மன் ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்கவும், குடும்பம் தழைக்கவும், ஒவ்வொருவரும் தன் குடும்பத்தோடு பொங்கல் வைப்பதைக் காணலாம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை.

அம்மன் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடும், அலங்காரமும் எப்போதும் நடைபெறுவது வழக்கம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் தனிச்சிறப்பு கொண்டவை. அந்த வகையில் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சரப சூலினி ப்ரத்யங்கிரா யாகத்தில் கலந்து கொண்டு சுக்கிர பலம் பொருந்திய வெள்ளிக்கிழமைகளில் அனைத்து அம்மன்களையும், மகாலட்சுமியையும் வணங்கி மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குடும்ப நன்மை காளி தேவியை வணங்கி அருள் பெறலாம்.

சகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி

ஆடி வெள்ளி வழிபாட்டின் மூலம் சுமங்கலி பெண்களில் கணவர் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். வறுமை நீங்கி செல்வம் தழைத்தோங்கும். மணமாகாத கன்னி பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். துன்பம் விலகும். எதிரிகள் தொல்லை ஒழியும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images