வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 23.07.2019 காலை 10.00 மணிக்கு ஆடி செவ்வாய்கிழமையை முன்னிட்டு தடைகளை தகர்க்கும் அதர்வண பத்ரகாளி யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் அபிஷேகம் துவங்கியது. இந்த அபிஷேகமானது வருகிற30.07.2019 ஆடி செவ்வாய்கிழமை வரை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து ஆடி அமாவாசையை முன்னிட்டு வருகிற 31.07.2019 புதன்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 1000 கிலோ மிளகாய் வற்றலை கொண்டு காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும் சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹாகாளி யாகத்துடன், அஷ்டபைரவர் யாகங்கள் நடைபெற உள்ளது.
ஆடி செவ்வாய்கிழமையான இன்று துவங்கிய 1000 கிலோ மிளகாய் அபிஷேகம் பக்தர்களுக்கு ஏற்படும் திருஷ்டிதோஷங்கள் அகலவும், இரத்த சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாகவும், திருமணம் ஆகாத பெண்களுக்குவிரைவில் திருமணம் நடைபெறவும், புத்திர பக்யம் உண்டாகவும், தடைகள் நிவர்த்தியாகி முயற்சிகளில் வெற்றிபெறவும், ஏவல், பில்லி, சூன்யம் நம்மை விட்டு அகலும், சத்ரு உபாதைகள் நிவர்த்தியாகவும் இங்குப்ரத்யோகமாக வைக்கப்பட்டுள்ள மிளகாய் வற்றலை பெற்று யாக குண்டத்தை மூன்று முறை வலம் வந்துஅவரவர்கள் பிரார்த்தனை நிறைவேற மஹா காளி ப்ரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் செய்தனர். மேலும்பல்வேறு நன்மைகளுக்காக பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிராம, நகர பொதுமக்கள், தமிழகம்மட்டுமின்றி பிறமாநில பக்தர்களும் பங்கேற்று பக்தியுடன் மிளகாய் அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.