வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் 346-வது ஆராதனை விழா இன்று 09.08.17 புதன்கிழமை காலை 6.30 மணிக்கு கோ பூஜை, 8.00 மணிக்கு சங்கல்பமும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு மஹா அபிஷேகம் ஸ்ரீ ராகவேந்திரருக்கே உரிய பஞ்சாமிர்த அபிஷேகமும், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் நடைபெற்றது.
ஸ்ரீ குரு ராகவேந்திரரருக்கு வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மார்பில் ராமரும், பிருந்தாவனத்தில் லட்சுமி நரசிம்மருடன் வடிவமைக்கப்பட்டு தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் கரிகோல பவனியாக கொண்டு செல்லப்பட்டு மிகவும் பிரசித்தி பெற்ற ம்ருத்திகா பிருந்தாவனங்களில் வைத்து பூஜிக்கப்பட்டு பக்தர்களால் ஆராதனை செய்யப்பட்டு அங்குள்ள (51 பிருந்தாவனங்கள்) ம்ருத்திகளை கொண்டு வந்து, தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி மஹா மந்திரத்துடன் மத்துவாச்சாரியர்களைக் கொண்டு விசேஷமான முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டவர்கள் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் நீங்கி, சகல சம்பத்துடனும், ஆரோக்யத்துடனும் குரு அருளுடன் வாழ ப்ரார்த்தனை செய்தனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.