Rahu Ketu Peyarchi Maha Yagam

வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 13.02.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நடைபெறவுள்ளது.

தன்வந்திரி பீடத்தில் 9 நவக்கிரகங்களுக்கும், 27 நக்ஷத்திரங்களுக்கும் உரிய விருக்ஷங்களை கொண்டு காலசக்கிரமாக அமைத்துள்ள செடிகளை போற்றும் விதத்திலும், உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அமைந்துள்ள ராகு-கேது பகவானை ஆராதிக்கும் வகையில் ஒவ்வொரு ராகு – கேது பெயர்ச்சியிலும், ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெற்று வருகிறது. ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் தங்கி பலன்களை அளிக்கின்றன. அவ்வகையில், கடக ராசியில் ராகு பகவானும், மகர ராசியில் கேது பகவானும் அமர்ந்துள்ளனர்.

இம்முறை, ராகு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-ஆம் தேதி நண்பகல் 1.25 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது பகவான், மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார். இதை முன்னிட்டு, தன்வந்திரி பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ராகு, கேது பகவான்களுக்கு நவகலச அபிஷேகமும், பெயர்ச்சி மகா யாகம், மகா தீபாரதனைகள் ஆகியவை நடைபெறுகிறது.

கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை உள்ளிட்ட 21 நட்சத்திரக்காரர்கள் மற்றும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images