தன்வந்திரி பீடத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ராகு - கேது பெயர்ச்சி மகா யாகம் .....
வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 01.09.2020 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நடைபெறவுள்ளது.
தன்வந்திரி பீடத்தில் 9 நவக்கிரகங்களுக்கும், 27 நக்ஷத்திரங்களுக்கும் உரிய விருக்ஷங்களை கொண்டு காலசக்கிரமாக அமைத்துள்ள செடிகளை போற்றும் விதத்திலும், உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் அமைந்துள்ள ராகு-கேது பகவானை ஆராதிக்கும் வகையில் 10 வருடமாக ராகு-கேது பெயர்ச்சி யாகம் நடைபெற்று வருகிறது.
ராகு, கேது ஆகிய நிழல் கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் தங்கி பலன்களை அளிக்கின்றன. அவ்வகையில், கடக ராசியில் ராகு பகவானும், மகர ராசியில் கேது பகவானும் அமர்ந்துள்ளனர்.
இம்முறை, ராகு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஆவணி மாதம் 16ஆம் தேதி 1.9.2020..நண்பகல் 2.26 மணிக்கு மிதுன ராசியில் இருந்து ரிஷபத்துக்கும், கேது பகவான், தனுசு ராசியிலுருந்து விருச்சிக ராசிக்கு இட பெயர்ச்சி அடைகிறார்.
இதை முன்னிட்டு, தன்வந்திரி பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ராகு, கேது பகவான்களுக்கு நவகலச அபிஷேகமும், பெயர்ச்சி மகா யாகம், மகா தீபாரதனைகள் ஆகியவை நடைபெறுகிறது.
இந்த பெயர்ச்சி யாகத்தில் மேஷம் ரிஷபம், கடகம், துலாம் விருச்சிகம் மகரம்,போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த யாக பூஜைகள் நடை பெறும் நாட்களில் ஊரடங்கு உத்திரவு அமுலில் இருந்தால் பொது மக்கள் நேரில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203