வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 28.12.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதியும் புனித மாதமான மார்கழி மாதத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெறும் புனர்பிரதிஷ்டையை முன்னிட்டு ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.
ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் சிறப்பு :சிவனின் அம்சம் ருத்ரன். யஜுர் வேதத்தில் ஆஹுதிகள் சமர்ப்பித்து, ஸ்ரீ ருத்ரரை வேண்டிக்கொள்ளும் ஒரு புனிதமான ஆற்றல் வாய்ந்த பிரார்த்தனை முறைதான் ருத்ர ஹோமம் என்பதாகும். ஸ்ரீ ருத்ர மந்திரங்களை ஜபித்துகொண்டே சிவனுக்கு பல்வேறுவிதமான புனிதப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வது ருத்ராபிஷேகம்.
ஸ்ரீ ருத்ரம் Tamil version