வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன்கருதி 27.06.2015 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்வாதி ஹோமமும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் மேற்கண்ட ருண விமோசன ஹோமம் நடைபெற்றது..
ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு மட்டும் கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம்பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான் பிறக்கிறோம்.
1. ரிஷி கடன் திருமணம் ஆகும் வரை, பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள். இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது. ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது
2. தேவ கடன் அதாவது பிறந்த அனைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம், யாகம் வருடா வருடம் செய்யவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதுவே தேவ கடன் என்பதாகும்.
3. பித்ரு கடன் தெவசம் திதி, ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்து வந்தால் பித்ருக்கள் ஆசிகளுடன் நமது பணக்கஷ்டம் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது.
இதுபோன்ற கடன்கள் தீர ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு மிகவும் பலன் தரும். இதை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்வாதி நட்சத்திரத்தில் மேற்கண்ட நாளில் ருண விமோசன ஹோமமும், ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெற்றது.. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான கடன்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
Tamil version