வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், இன்று 25.03.2018 ஞாயிற்று கிழமை சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகமும் 14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழாவும் காலை மாலை இருவேளையும் பூஜைகள் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு மஹா அபிஷேகமும், சீரடி சாயிபாபா ஜயந்தியை முன்னிட்டு பீடத்தில் உள்ள சீரடி தங்க பாபாவிற்கும், சீரடி சூரிய பாபாவிற்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு மங்கள இசை, 6.00 மணிக்கு சுப்ரபாதம், 6.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு கோ பூஜை, 6.45 மணி முதல் வேத பாராயணம், தேவதா அனுக்யம், மஹா கணபதி பூஜை, 8.00 மணிக்கு 1008 கலசங்களுக்கு சிறப்பு பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா ஆவாஹனம், 8.30 மணிக்கு மஹா சங்கல்பம், சகல தேவதா ஜபம், 9.00 மணிக்கு தன்வந்திரி மூலமந்திர ஜபம், 10.30 மணிக்கு ஹோமம், 12.00 மணிக்கு ஸ்ரீ பட்டாபிஷேக ரமருக்கு மஹா அபிஷேகம், சீரடி சாயிபாபா ஜெயந்தி சிறப்பு பூஜைகள், மஹா பூர்ணாஹூதி,12.15 மணிக்கு சதுர்வேத பாராயணம், 12.30 மணிக்கு பிரசாத விநியோகம், 1.00 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் தவத்திரு. நங்கநல்லூர் காமாட்சி ஸ்வாமிகள் மற்றும் ஏராளமானவர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நாளை 26.03.2018 திங்கட் கிழமை காலை 9.00 மணியளவில் ஸஹஸ்ர கலசாபிஷேகம் நிறைவு பூஜைகளும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 1008 கலச மஹா அபிஷேகமும் இதர பரிவார மூர்த்திகளுக்கு நவகலச அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.