Sahasra Chandi Yagam (1000 Chandi Yagam)

சகஸ்ரசண்டி மகாயாகம் துவங்கியது. இன்று 23.07.2017 முதல் 30.07.2017 வரை எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

உலக நலன் கருதி சகல ஐஸ்வர்யம் தரும் சஹஸ்ர சண்டி யாகம் ( 1000 சண்டி யாகம் தன்வந்திரி பீடத்தில் இன்று 23.07.2017 ஞாயிற்றுகிழமை முதல் 30.07.2017 ஞாயிற்றுகிழமை வரை காலை மற்றும் மாலை இரண்டு வேளயும் (தேவி வாக்கின்படி _சுருதம் ஹரதி பாபானி ததா ஆரோக்யம் ப்ரயச்சதி) சொல்படி எல்லாவிதமான நன்மைகளும் தேவியின் வாக்கின்படி இந்த யாகத்தில் எல்லோரும் கலந்துகொண்டு சண்டிகா தேவியின் அருளை பெறும்படி கேட்டுகொள்கிறோம்.

ப்ரம்மஸ்ரீ. M.ராமகிருஷ்ண சர்மா, ஸ்ரீவித்யா உபாசகர், ஸ்ரீபுரம், வேலூர், அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த யாகத்தில் சென்னை, சிதம்பரம், திருப்பதி, பூனே, இராமேஸ்வரம், திருச்செந்தூர், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் உள்ள ஸ்ரீவித்யா உபாசகர்கள் பங்கேற்றுவுள்ளனர்.

இன்று காலை 7.00க்கு கோ பூஜை, விநாயகர் வழிபாடு, எஜமானர் சங்கல்பம் புண்ணியாகவாசனம், ரக்‌ஷா பந்தனம், நாந்திச்ரார்த்தம், வாஞ்சாகல்ப கணபதி யாகம், நவக்கிரக ஹோமம், மஹா லக்ஷ்மி யாகம், தன்வந்திரி யாகம், சுதர்சன யாகம், சௌபாக்கிய திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, நடைபெற்று விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் சதுஷ்ஷஷ்டி யோகினி பைரவர் பலி பூஜைகள், பஞ்ச சூக்த பாராயணம், ,சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருவலம் சர்வமங்களா பீடம் ஸ்ரீலஸ்ரீ சாந்தா ஸ்வாமிகள், சென்னை டாக்டர் கோகிலா செல்வராஜ், சிவசந்திரன் தம்பதினர், தேன்மொழி ஜெயபால், ராமசந்திரன் குடும்பத்தினர், திருமதி அலமேலு பாச்கரன், வேலூர் மாவட்ட P.R.O. திரு. இளங்கோ குடும்பத்தினர், சித்தூர் R.T.O திரு ரவீந்திரகுமார் மேலும் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து டக்டர் முரளிதர ஸ்வாமிகள் அருளுரை பிரசாதம் வழங்கினார். இந்த ஹோமத்தில் நூறுவகயான பழங்கள் புஷ்பங்கள் மூலிகைகள் கரும்பு மோதகம் அப்பம் அருகம்புல் நெல்பொரி மற்றும் அஷ்டதிரவியங்கள் அன்ன பிரசாதங்கள் பட்டு வச்திரங்கள் சமர்ப்பிக்கபட்டது. தொடர்ந்து நாளை 24.07.2017 திங்கள் கிழமை காலை 7.00 முதல் 12.00 மணி வரை கோ பூஜை, புண்ணியாகவாசனம், விநாயகர் வழிபாடு, ருத்ர ஜபம், ஏகாதச ருத்ர ஹோமம், வசோத்த்வாரா ஹோமம், பூர்ணாஹுதி, மங்களார்த்தி, மரகதேஸ்வரருக்கு அபிஷேகம், பிரசாத விநியோகம். 24.07.2017 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணம், தேவி மஹாத்மியம் பராயணம் (சண்டி பாராயணம்), மங்களார்த்தி, சதுர்வேத உபசாரம், பிரசாத விநியோகம் நடைபெருகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images