Samayam Book distribution with Samathuva Pongal

தன்வந்திரி பீடத்தில் 14 ம் ஆண்டு சமத்துவ பொங்களுடன் சமய நூல் வழங்கும் விழா வருகிற 14.01.2018 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற உள்ளது.

பண்டைய காலங்களில் ஆன்மிக நுல்கள் படிப்பது என்பது அனைத்து மக்களிடமும் இருந்து வந்தது. படித்த அந்த கருத்துக்களை பிள்ளைகளிடம், பேரக் குழந்தைகளிடம் கதைகளாக சொல்லி நல்லொழுக்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தனர்.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் புத்தகம் படிப்பது என்பது அரிதாகி விட்டது. தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்து விட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுவும் குறைந்து விட்டது என்றால் அதில் சந்தேகமில்லை.

ஒரு இளைஞனை நிறுத்தி! நீ குருமார்கள் எழுதிய புத்தகங்களை படிக்கும் பழக்கம் உண்டா என்று கேட்டால், குருமார்களா அப்படியென்றால் யார் என்று கேட்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் தெய்வங்களாலும், குருமார்களாலும் மனித வளர்ச்சிக்காக எழுதப்பட்ட எண்ணற்ற நுல்கள் உள்ளன. ஏன் இன்னும் அச்சில் ஏறாத பழைய ஓலைச் சுவடிகள் கூட உள்ளன எனலாம்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மஹாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், அதே போல் 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், கிறிஸ்துவின் வேதாகமம், அல்லாவின் குரான் என பலவிதமான நுல்கள் இருந்து வருகின்றன. மேலும் பல மகான்கள் எழுதிய பல்வேறு நூல்களும் உள்ளன. இதுபோன்று ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும், அவரவர்களின் மத குருமார்களையும், தெய்வங்களையும் பக்தியுடனும், சிறத்தையுடனும் வழிபட வேண்டியும், நல் ஒழுக்கமும், மனித நேயமும், மத நல்லிணக்கமும், தர்ம சிந்தனைகளும், தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் குருவருளுடன் வருகிற தமிழர் திருநாளில் 14.01.2018 ஞாயிற்று கிழமை நண்பகல் 12.00 மணியளவில் சமத்துவ பொங்கலுடன் சமய் நூல்கள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை கயிலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images