வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கைவளத்திற்காகவும் வருகிற 29.06.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில்பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சனி ப்ரீதிஹோமத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.
கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனைஸ்வரர். நீதிமானாகும் ஸ்ரீ சனீஸ்வரருக்கு அவருக்கு பயப்படாதவர்கள் கிடையாது. இவரை மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறது. மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்தப் புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார். எனவே தான் அவரை மகிழ்விக்க, அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் விதித்திருக்கிறார்கள்.
சகல செல்வங்களையும், நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்குபவர் ஸ்ரீ சனி பகவான். ஒருவரின் ஜாதகத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி, அந்திமச் சனி, அஷ்டம சனி அர்தாஷ்டம சனி, ஏழரைசனி, ஜன்ம சனி போன்ற பல்வேறு நிலைகள் உள்ளது. சனி பகவானை வழிபடுவதின் மூலம் செல்வ வளம் பெறலாம், வீட்டில் சகல சௌபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்து சேரும், குபேர சம்பத்துக்களையும், யோகத்தையும் பெறலாம், ஜென்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழலாம், எதிரிகள் தொல்லை முதலான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழலாம், வாழ்வில், நிம்மதியும் சந்தோஷமும், பொங்கிப் பெருகும்.
மேலும் இவ்வைபவங்களில் பங்கேற்ப்பவர்களுக்கு ஏழரைசனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, சனி திச, சனி புக்தி போன்றவையால் ஏற்ப்படும் கஷ்டங்கள் குறையவும், தொழில் விவசாயம் சிறந்து விளங்கவும், திருமண தடைகள் நிவர்த்தியாகவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று நல்வாழ்வு வாழவும் பிரார்த்தனை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.