வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 04.05.2019 மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12 .00 மணி வரை சனி கிரக தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.
சனீஸ்வர பகவான் :
இவர் அரசனை ஆண்டியாகவும் ஆண்டியை அரசனாகவும் மாற்றுபவர். மனிதனுக்கு துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பார். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் ஒரு நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கும் இவர்தான் காரணம். விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், அருள்புரியும் உத்தம மூர்த்தியாக உள்ளார்.
இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல. திருத்தும் தெய்வம். இவர் சோதனை கொடுத்து நம்மை திருத்தி,நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாக புரிந்துகொள்ளாமல்,இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். தவறு செய்தவன் தான் பயப்பட வேண்டும். தவறு செய்யாதவர்கள் சனியினால் தோஷம் ஏற்பட்ட காலங்களில், இவருக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றி வழிபட வேண்டும்
ஆரோக்ய பீடமாகவும், அக்ஷயபுரியாகவும் விளங்கும் தன்வந்திரி பீடத்தில் பக்தர்களின் நலம் கருதி சனி ப்ரீதி ஹோமம் மேற்கண்ட தேதியில் நடைபெறுகிறது. ஒருமுறை வந்து யாகத்தில் பங்கேற்று போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் பாதாள சொர்ண சனீஸ்வரர் அமைய உள்ளதாலும் சனி தோஷங்கள் நீங்கி செல்வங்கள் வளரும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சொர்ண சனிபகவான் விளங்க உள்ளார். தசாபுக்தியாலோ, ஜாதகரீதியாகவோ சனியின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து காலசக்கிரத்திற்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் வலம் வரும் பக்தர்களுக்கு எள்ளன்னம் அளித்து சனிதோஷம் நீங்கி சந்தோஷம் பெறலாம்.
தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், அஷ்ட காலபைரவருக்கும் சொர்ணா பைரவருக்கும், மஹா ப்ரத்யங்கிரா தேவிக்கும் தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.