ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வழக்கமாக நடைபெறும் சனி சாந்தி ஹோமம் வருகிற அன்று 01/10/2016, ஸ்தாபகர் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்கள் முன்னிலையில், காலை 10.30 மணியளவில் சனி சாந்தி பரிஹார ஹோமம் நடைபெறவுள்ளது. இந்த ஹோமத்தில் சனி பகவானுக்குரிய எள்,நல்லைண்ணைய், பச்சை அரிசி, வன்னி சமித்து, போன்ற திரவியத்துடன் கருப்பு மற்றும் நீல நிற வஸ்திரங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளன.
சனி சாந்தி பரிஹார ஹோமத்தில் பங்கேற்று மனமுருகி சனி பகவானை வழிபட்டால் சோதனையின் அளவு குறையும். மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் அருளால் சுகபோக வாழ்க்கையுண்டாகும், தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகம், பிரயாண லாபம் உண்டாகும். மேலும், அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் சனி திசை, சனி புத்தியினால் ஏற்படும் தொல்லைகளும், தோஷங்களும் விலகி ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் மற்றும் ஆனந்தம் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இதனை தொடர்ந்து, கால சக்கரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்துக்கு, நடைபெறும் விருட்ச பூஜையில் பங்கேற்று இறைவன் அருளை பெற வேண்டுகிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version