Sankatahara Ganapati Homam Oct 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 17.10.2019 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை சங்கடங்கள் தீருக்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு பஞ்சதிரவிய அபிஷேகமும் நடைபெற உள்ளது.

விநாயகரை வழிபடும் விசேஷ நாட்களில் மிகவும் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி நாள். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விநாயக பெருமானை வழிபட்டால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு,புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும், சனி தோஷங்கள் அகலும் என்று புராணங்கள் சொல்கின்றன.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சங்கடஹர கணபதி ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று விசேஷ ஆராடனைகள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images