வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.10.2016 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு மேல் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி இறையருளுடன் குழந்தை செல்வம் பெற சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் நடைபெற உள்ளது.
சந்தான கோபால கிருஷ்ண ஹோமம் என்பது திருமணமாகி வெகுநாட்களாக குழந்தை இல்லாத தம்பதியர் குழந்தை செல்வம் வேண்டி செய்யப்படும் ஹோமம் ஆகும்.
மேலும், கர்ப்பத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பாக வளரவும் இந்த ஹோமம் உதவுகிறது மற்றும் குழந்தை உறுதியாகவும், செழிப்பாக வளரவும் ஸ்ரீ நவநீத கிருஷ்னின் ஆசிர்வாதமும், ஸ்ரீ சந்தான லக்ஷ்மியின் அருளும் கிடைக்கிறது.
தம்பதியர்க்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கவும், உடல் ரீதியாக உள்ள குறைகள் அகலவும், மருத்துவ ரீதியாக உள்ள நோய்கள் விலகவும் தம்பதியர்களுக்கு ஒற்றுமை அதிகரிக்கவும் இந்த ஹோமம் பலன் தரும்.
இந்த ஹோமத்தை ஒரு குழந்தை இல்லாத தம்பதியினர் செய்வதினால் அவர்களை ஆசிர்வதித்து அவர்களுக்கு குழந்தை வரம் அருள்கிறார் இறைவன் கிருஷ்ணன்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் பீடாதிபதி டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version