Santhana Gopala Yagam, Gandharva Raja Homam, Swayamvara Kala Parvathi Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்களாக நடைபெறுகிறது.

தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம்
சந்தான கோபால யாகம் பலன்கள் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது.

இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருள் பெற ஸ்ரீகிருஷ்ணருக்கு வெண்ணை சார்த்தி வழிபடும் பொழுது பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்
கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம் போன்ற சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள் :

இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் சுயம்வர கலாபார்வதி யாகமும் பெண்களுக்கு கலசாபிஷேகமும், மாங்கல்ய பூஜையும் நடைபெற உள்ளது.

பௌர்ணமியில் நடைபெறும் மேற்கண்ட முப்பெரும் யாகங்களில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வத்தித்து பிரசாதம் வழங்க உள்ளார். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images