Saptarishi Poojai

வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இன்று மக்களால் அக்ஷயபுரியாகவும், சௌபாக்யபுரியாகவும்,மஹோத்ஸவபுரியாகவும் மஹோத்ஸவ க்ஷேத்ரமாகவும், ஔஷதகிரியாகவும் அழைத்து மகிழும் ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்,ஆசிகளுடன், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 19.04.2019 வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 மணி முதல்1.00 மணி வரை சப்தரிஷி பூஜை நடைபெறுகிறது.

சப்தரிஷிகள் :

கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகள்! (மற்றொரு விதமாகவும் சொல்வதுண்டு).

கச்யபர்: தேவர் குலம் மற்றும் அசுரர் குலம் இரண்டுமே கச்யபரிடம் இருந்து தோன்றின. அவரில் இருந்து வந்த மனுவிடம் இருந்து தோன்றியதே மனித குலம்!

அத்ரி: இவரிடமிருந்து தோன்றியவன் சந்திரன். தத்தாத்ரேயரும், அத்ரி தம்பதியிடம் இருந்து உருப்பெற்றார். மருத்துவத்தில் சிறந்த ஆத்ரேயரும் அத்ரியிடம் இருந்து தோன்றியவரே! அத்ரி-அனுசூயா தம்பதிபோல் தாம்பத்தியம் சிறக்க வாழ வேண்டும் என்று புதுமணத் தம்பதியை வாழ்த்துகிறது ரிக்வேதம்.

பரத்வாஜர்: இந்த மகரிஷி தமது மூன்று முழு ஆயுளையும் வேதம் பயிலுவதற்குப் பயன்படுத்தியவர். இவரும் மருத்துவ ஆய்வில் சிறந்தவர் என்கிறது வேதம். இன்றைக்கும் பரத்வாஜ கோத்திரத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

விஸ்வாமித்திரர்: இந்தப் பெயருக்கு, உலகத்துக்கு உற்ற நண்பன் என்று அர்த்தம். இந்திரனுடன் மோதி, புது உலகைப் படைக்க முயன்றவர் இவர். விஸ்வாமித்திர சிருஷ்டி எனச் சிலவற்றைக் குறிப்பிடுவர். சிங்கமும் புலியும் இறைவனின் படைப்புகள். அந்த இனத்துடன் தொடர்பு கொண்ட நாயும் பூனையும் விஸ்வாமித்திர சிருஷ்டிகள்! நாம் பயன்படுத்தும் தர்ப்பைப் புல்லிலும் விஸ்வாமித்திரம் எனும் பிரிவு உண்டு.

கவுதமர்: அகல்யையின் கணவர். இவர் இயற்றிய தர்ம சூத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அறம் காக்க அனைவருக்கும் அறைகூவல் விடுத்து போதித்தவர்.

ஜமதக்னி: துஷ்டர்களை அடக்க அவதாரம் இஏற்ற ஸ்ரீமந் நாராயணனுக்கு (ஸ்ரீபரசுராமருக்கு) தகப்பனாக இருந்து அறம் காத்தவர்.

வசிஷ்டர்: இவரின் ஆன்மிகத் தகவல்கள் இன்றும் பயனுள்ளவையாகப் போற்றப்படுகின்றன. அருந்ததியின் கணவர் இவர். இருவரும் ஆதர்ச தம்பதி. இவரிடம் பாராட்டு பெறுவது கடினம். மிகச் சிறந்ததையே இவர் பாராட்டுவார். எனவேதான், வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி என்னும் சொல்வழக்கு உருவானது. பெண்மைக்கு உயர்வளித்துப் போற்றுபவர்கள் இவர்கள்.

சப்த ரிஷி பூஜை :

எட்டுத்திக்கிலும் ஈஸ்வரனுடன் சப்த ரிஷிகள் இருந்து பூமியை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஏழு ரிஷிகள் சப்த ரிஷிகளாகவும், எட்டாவது ரிஷியாக பரமேஸ்வரனும் இருந்து அருள் பாலித்து வருகிறார்.

சப்தரிஷிகள் பிறவிகளின் தீர்மானத்தைக் கவனித்து அதற்கேற்ப நவக்கிரகங்களின் இயக்கத்தையும்,காலச்சக்கரத்தின் இயக்கத்தையும் கவனிக்கிறார்கள். பிறவி வினைகளான கர்ம வினைகளை அவர்களது பக்தி,யோக, ஞான வழிகளைக் கொண்டு கால வினைகளை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட சப்த ரிஷிகளை வணங்கி வழிபட்டால் முற்பிறவி வினைகள் அகலும். நடைமுறை யோகப்பலன்களும் சிறப்பாக அமையும். இப்படிப்பட்ட சப்த ரிஷி பூஜைகள் காசியில் விஸ்வநாதர் சந்நிதியில் தினம்தோறும் இரவு வேளையில் நடைபெற்று வருகிறது என்பது செய்தியாகும்.

அந்த வகையில் அகத்தீஸ்வரம் எனும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை சுற்றி சப்தரிஷிகளுக்கு ஆலயம் அமைந்துள்ளது. இந்த ரிஷிகளை போற்றி வழிபடவும், ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 468 சிவலிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சித்தர்களை பூஜிப்பதும் வழக்கமாக கொண்டு 23 ஆம் ஆண்டு குரு பூஜை நடைபெற உள்ளது. அப்படிப்பட்ட இந்த புண்ணிய க்ஷேத்திரத்தில் ஸ்வாமிகளின் குருவான பெற்றோரின் நினைவு நாளில் பெரியோர்களுக்கு நடைபெறும் மஹேஸ்வர பூஜையை முன்னிட்டு சப்தரிஷி பூஜை நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொண்டு குரு அருள் பெற்று திரு அருளுக்கு பாத்திரர்களாக வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

7 சிவனடியார்கள், சாதுக்கள் அல்லது குருமார்கள் அமர வைத்து அவர்களை சப்தரிஷிகளாக பாவித்து, பாதபூஜை செய்து, மாலை அணிவித்து, விபூதி, சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களுடன் சிவ பூஜை செய்து, வஸ்திரம், ருத்ரக்ஷம், தாம்பூல தக்ஷிணை அளித்து சப்தரிசிகளை வேண்டி, சகல விதமான பாபங்கள், தோஷங்கள், சாபங்கள், கர்ம வினைகள் நீங்கி, ஆயுள் ஆரோக்யம் பெற வேண்டி பிரார்த்தனை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images