சரப ஹோம பலன்கள்: பட்சிகளின் ராஜாவான ஷரபத்தின் ஆசீர்வாதங்களை பெற்று ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதி வாரம் ஞாயிற்று கிழமை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் மாலை நேரத்தில் நடை பெறும் ஷரப ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சக்தி வாய்ந்த பல்வேறு நன்மைகள் பக்தர்கள் பெறலாம். நம்மை பாதுகாக்கும் சரபேஸ்வரர் உக்ர தெய்வமானவர். இவர் நம்முடைய எதிர்மறை ஆற்றல்கள், உடல்நலப் பிரச்சினைகள், வாழ்க்கையை பாதிக்கும் அனைத்து சூழ்நிலைகளிலிருந்து நம்மை காப்பவர், சரப ஹோமம் தீய சக்திகளை எதிர் கொள்ளும் மன தைரியத்தை அளிக்கக் கூடியது. அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியையும் பெற இந்த ஹோமம் பேருதவி புரியும் என்கிறார் ஸ்ரீ முரளீதரஸ்வாமிகள்.