Saraswathi Homam with Aksharabhyasam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நவராத்ரி, மஹா நவமி மற்றும்விஜயதசமியை முன்னிட்டு குழந்தகள் கல்வி செல்வம் பெறவும், சகல கலைகளிலும் சிறந்து விளங்கவும்கலைமகள் ஸ்ரீ வாணீ சரஸ்வதி தேவியை வேண்டி வருகிற07.10.2019 திங்கள்கிழமை மஹாநவமியன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணீ சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேகஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 08.10.2019 செவ்வாய்கிழமை விஜயதசமியன்று காலை 10.00மணி முதல் 12.00 மணி வரை அக்ஷராப்யாசமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியை குறித்து நடைபெறும் ஹோமம் சரஸ்வதி ஹோமம் ஆகும். பத்மாசனம் எனப்படும் தாமரை மலரில் அமர்ந்து கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி அனைத்துக்கும் சொந்தமானவள். ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகியவற்றின் வடிவாக இருப்பவள். புத்தி கூர்மை, ஞாபக சக்தி, கல்வியில் வெற்றி போன்ற பலவகை நன்மைகளை தருபவள். ஆய கலைகளுக்கு அதிபதியாகவும்,ஞானத்தின் வடிவமாகவும் விளங்குபவள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவியை வேண்டி நடைபெறும் ஹோம்மே சரஸ்வதி ஹோமம் ஆகும். ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபடுவதின் மூலம் சிறந்த புத்தி கூர்மை, ஞாபக சக்தி, கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கலாம். மேலும் திறமை மற்றும் நம்பிக்கையை அளிக்கும். இதனால் முயற்சிகள்அனைத்திலும் வெற்றியை பெற்று வாழ்க்கையில் முன்னேறத்தையும், பல நன்மைகளையும் அடையலாம்.மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகும், வெற்றிக்கான நம்பிக்கை மேம்படும், இலக்குகளை அடைவதற்கான சக்தி பிறக்கும், கல்விப் பயணம் மேன்மையுறும், மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று, தேர்வில் வெற்றி பெற இயலும், இலக்கிய முயற்சிகள் முன்னேற்றம் பெறும்,பெருமையும், புகழும் சேரும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோம பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். மேலும் பங்கேற்கும் பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images