இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். அதனால் தோஷஙகள் ஏற்படுகிறது. நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம்; ஆனால் புண்ணிய காரியங்களை கர்மாக்கள், நம்மை செய்ய விடுவதில்லை. நாம் நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் பல கெட்ட காரியம்; வாயால் புரளிப்பேச்சும் அசத்தியமும்; மனத்தினால் கெட்ட நினைவுகள்; பணத்தினால் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம். பாபத்துக்கு இரண்டு சக்திகள். ஒன்று, இன்று இப்போது நம்மைத் தவறில் ஈடுபடுத்துவது. இரண்டாவது, நாளைக்கும் இதே தவற்றை நாம் செய்யுமாறு தூண்டுவது. பழக்க வழக்கம் தான் நம்மை பாவத்தில் இழுக்கிறது. அதற்காகப் பயம் வேண்டாம். நம்மைப் போல் இருந்தவர்கள்Tamil version