Sashti Yagam For The Blessing of Santhana

சந்தான பாக்கியம் வேண்டி சஷ்டி யாகம் சஷ்டி திதி சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது 15 நாட்களுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் வரும்
ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்
படுகின்றன.அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்ச சஷ்டி (அ) வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்ச சஷ்டி (அ) தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.
 
விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது.
 
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால்
நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
 
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
 
திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.
சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
 
சஷ்டியில் விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற்று வாழ்வில் அனைத்து செல்வ வளமும் பெறலாம்.இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சஷ்டி திதியில் மேற்கண்ட அனைத்து பலன்களும் பெற இன்று 18.04.2021,ஞாயிறு கிழமை காலை 10 மணிக்கு ஷஷ்டி திதி முன்னிட்டு சத்ரு சம்மார ஹோமமும் கார்த்திகை குமரனுக்கு அபிஷேகமும் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் நடைபெறுகிறது.மேலும் கோரோனவை விரட்டும் கோடி யாகமும், தன்வந்த்ரி மூலவருக்கு இளநீர் அபிஷேகமும் நடைபெறும்.
Ct. 94433 30203.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images