Sathru Samhara Homam - Disease Relief Homam - Ashta Bhairavar Yagam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 14.03.2020 சனிக்கிழமை சஷ்டியை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், பஞ்சாமிருதம், திரவியப்பொடி, கரும்பு சாறு, பன்னீர் போன்ற திரவியங்களால் நவ கலச அபிஷேகமும், திரிசதி அர்ச்சனையும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

சஷ்டியின் மஹிமை :

முருக பெருமானுக்குரிய முக்கிய விரதமாகும் சஷ்டி விரதம். “சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் குழந்தை வரும்” என்ற ஒரு பழமொழி கூறுவதுண்டு. மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக சஷ்டி விரதம் அமைகிறது. மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை சஷ்டி விரதம் உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

சத்ரு சம்ஹார ஹோமம் :

சத்ரு சம்ஹார ஹோமம் என்பது முருக பெருமானை குறித்து செய்யப்படும் ஹோம வழிபாடு ஆகும். தூய அன்பின் அடையாளமாக திகழும் இவர், தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, பல நன்மைகளை அருளக் கூடியவர். இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கும். கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப உறவுகள் மேம்படும்.

மேலும் வருகிற வருகிற 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மருத்துவ கடவுளும், ஆரோக்ய வாழ்வை கொடுப்பவருமான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளையும், ஸ்ரீ ஆதித்ய பகவானையும் வேண்டி உலக மக்கள் நலன் கருதி நோய் நிவாரண ஹோமமும், காலசக்கிர பூஜையும், ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 16.03.2020 திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை அஷ்ட பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images