Sathru Samhara Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 07.03.2018 புதன் கிழமை மற்றும் ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சகல தோஷங்கள் நீக்கும் சுதர்சன யாகத்துடன் சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமம் நடைபெறுகிறது.

தன்வந்திரி பீடத்தின் மகிமை

3 வருடங்களில் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளுக்கு 2 லட்சம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணம் செய்து, 147 ஹோமங்களில் பங்கேற்று 67 திவ்ய தேச பெருமாளின் அபிமானம் பெற்று சைவ வைணவ பேதமின்றி ஏராளமான பாடல்பெற்ற ஸ்தலங்களில் பவனி வந்து 10கும் மேற்பட்ட மொழிகளில் 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி லிகித ஜப மந்திரங்களை கொண்டு, மந்திரமே யந்திரமாக அமைத்து மந்திர மலையில் ஔஷத நாயகன் எனும் வைத்ய ராஜன், ஆயுர்வேத கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 9 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் மன நோய் உடல் நோய் நீக்கும் மருத்துவராக ஹஸ்தகிரி எனும் காஞ்சீபுரத்திற்கும் அருளாலகிரி எனும் சோளிங்கபுரத்திற்கும் நடுவே ஔஷதகிரியில் வாலாஜாபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து தன் தாயிக்கு கொடுத்த சத்தியத்தின் பேரில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை எழுந்தருள செய்துள்ளார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

பிரார்த்தனை தான் உயர்ந்த வழி :

வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் கைகூட பிரார்த்தனை தான் உயர்ந்த வழி. அமைதியும், நிம்மதியும் இல்லாத வாழ்க்கை சூழல்களிலிருந்து மன நிறைவின் சூழலுக்கு வந்து சேருவதற்கான வழிகளில் ஓன்று தான் ஆலய தரிசனம். இத்திருத்தலமான ஸ்ரீதன்வந்திரி பீடம் வருகைபுரியும் பக்தர்களின் மனதை புதுப்பிக்கின்றது. சுத்தம் செய்கிறது எனலாம். இப்பீடத்தில் உள்ள அபூர்வமான சிலைகளை கண்டு தரிசிக்கும் பொழுது மனதுக்கு இதுவரை கிடைக்காத ஆனந்தம் கிடைப்பதை நாம் கண்கூட காணலாம். இந்நாள்வரை இங்கு வந்து தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம், தரிசனம் செய்து திரும்பச் செல்லும்போது மறைகிறது. சில காரணங்களையும் வாய்ப்புகளையும் நினைத்து நாமாகவே நிம்மதியும் அடைகிறோம்.

தன்வந்திரி பகவானுடன் சக்கரத்தாழ்வார் :

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இது ஒரு அபூர்வமான புனிதத்தலம். இங்கு தன்வந்திரி பகவான், சக்கரத்தாழ்வார், ஆரோக்ய லக்ஷ்மி, கார்த்திகை குமரன் போன்ற 75கும் மேற்பட்ட சன்னதிகள், 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக அமைந்துள்ளனர். பொதுவாக சக்கரத்தாழ்வார் இருக்குமிடத்தில் திருமாலும் குடியிருப்பார். சந்தான கோபால கதையில் திருமால் சக்கரத்தாழ்வார் மூலமாக அர்ஜூனனுக்கு வைகுண்ட தரிசனம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அந்த தியான உருவம் தான் இங்கு சிலை வடிவமாக அமைக்க்ப்பட்டுள்ளது. அர்ஜுனன் அன்று அடைந்த பேரின்பப் பேறை இங்கு தரிசனம் செய்பவர்களும் அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சுதர்சன மந்திரம்

"ஓம் நமோ பகவதே மஹாசுதர்சனாய ஹும் பட்Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images