Shodasa Ganapathi Homam with 1008 Modakas

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி இன்று 14.05.2017 ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 1008 மோதகங்களை கொண்டு 16 கலசங்கள் கொண்டு ஷோடச கணபதி யாகத்துடன் ஸ்ரீ வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்றது. இந்த யாகத்தில் பொரி, வடை, சுண்டல், மோதகம், வாழப்பழம், ஆப்பிள், கரும்பு. தயிர்சாதம், போன்ற நிவேதனங்கள்.

கரும்புதுண்டு, அவல், சத்துமாவு, நெல்பொரி, நாட்டு சர்க்கரை, எள், அப்பம், வாழைப்பழம் போன்ற அஷ்ட திரவியங்கள் அரசாங்க நன்மைதரும் அரசங்குச்சி, ஏவல்கல் பில்லி சூன்யங்கள் விலகும். கருங்காலிக்கட்டை. கிரஹகோளாறுகள் நீக்கும். வன்னிக்குச்சி. குழந்தைகளின் கல்வி வளர்ச்சி தரும்.புரசங்குச்சி, செல்வம் தரும். வாய்ப்பு உண்டாக வில்வக்குச்சி புகழைச் சேர வைக்கும் ஆலங்குச்சி காரியத்தடை விலகி வழக்குகளில் வெல்லச் செய்யும் நொச்சி மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும் நாயுருவி, எதிரிகள் இல்லாத நிலை உருவாகும் எருக்கன் குச்சி- போன்ற அஷ்ட சமித்துகள் நினைத்த காரியம் கைக்கூட யாகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்ந்து .பால், தயிர் ,இளநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம்,விபூதி, கரும்புச்சாறு, போன்ற 8 விதமான அபிஷேக பொருட்களைக் கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று. தும்பைப்பூ, அருகம்புல், எருக்கம்பூ, தாமரைப்பூ, முல்லை, மல்லிகைபூ, தவனம், மருக்காழுந்து, போன்ற விஷேச அஷ்ட மலர்களை கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது..ஹோமத்தின் போது எப்போதும் பாதுகாப்பு, செல்வம் வளர, கடன் தொல்லை நீங்க, தேவியின் அருள்கிட்ட, உலகம் வயப்பட, அதிர்ஷ்ட லாபம், செல்வம் கிட்ட, மகிழ்ச்சி ஏற்பட, எல்லாக் காரியமும் நிறைவேற, சீக்கிரம் பயன்தர, நோய் நீங்க, பிள்ளைப் பேறு உண்டாக, மன சாந்தி, ஐயம் ஏற்பட, நவக்கிரக சாந்தி முக்காலமும் உணர, விசாலபுத்தி, தைரியம் வர, தொல்லை யாவும் நீங்க, ராஜயோகம். கலை வளர எல்லாக்காரியங்களும் வெற்றி கல்விப்பேறு முழுப்பலனும் கிட்ட, குருவருள் உண்டாக, தாப நீக்கம், நினைத்ததை அடைய, ஸர்வாபீஷ்ட ஸித்திம் ஆபத் நிவர்த்தி, மனோவச்யம், மேதாபிவ்ருத்தி, விஷ்ணு பக்தி ,போன்ற காரணங்களுக்காக வச்யஸித்தி கிடைக்க கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.இந்த தகவலை தன்வந்திரி குடுமபத்தினர் தெரிவி த்தனர். Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images