Special Five Homams 2019

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன்கருதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரைகீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

1. நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்தி ஹோமம்.

2. எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.

3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.

4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.

5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம். ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், அஷ்ட ஐஸ்வர்யம்தரும் 5 ஹோமங்களும் சிறப்பு அர்ச்சனையும், நடைபெறவுள்ளது.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் .......

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள்எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்)அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள்,நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்றுஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

முழுத்தேர்வு, தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடைபெறும் இந்த யாகங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பங்கு கொண்டு பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன்குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images