வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் 19.11.2015 வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில் பீடத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு. பா.முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கலவை தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள், தன்வந்திரி பீடம் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு.சரவணன் வரவேற்றார்.
கூட்டத்தில் வாலாஜா வட்டாட்சியர் திரு. குணசீலன், இராணிப்பேட்டை தீயணைப்புதுறை அதிகாரி திரு.கமலக்கண்ணன், வாலாஜா சப்.இன்ஸ்பெக்டர்கள் திருமதி.ஜெயலட்சுமி, திரு.ரவி, வாலாஜா வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.இராஜசேகரன், அனந்தலை கிராம நிர்வாக அலுவலர் கல்யாணராமன், தொழிலதிபர்கள் திரு.லட்சுமணன், திரு.மகேந்திரவர்மன், திரு.மதிவாணன், அனந்தலை ஊராட்சிமன்ற தலைவர் திரு. ஏ.எம்.வெங்கடேசன், துணைத்தலைவர் திரு.இராஜேந்திரன், கீழ்புதுப்பேட்டை முக்கிய பிரமுகர்களான திரு.தேவராஜ், திரு.சேட்டு, திரு.மணி, திரு.ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
கும்பாபிஷேகத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, குடிநீர்வசதி, போக்குவரத்து வசதி மற்றும் அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்வதென இக்கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் வந்து செல்வதற்காக காஞ்சிபுரம், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், வாலாஜாபேட்டை ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்ய பீடத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Tamil version