Special pooja for Maragathambigai Samedha Maragatheswarar

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.12.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ருத்ர ஹோமத்துடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது.

சிவபெருமானுக்குரிய விரதங்கள் மிகவும் விசேஷமானது கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம். இந்த விரதம் அனுஷ்டித்த சந்திரன் தனது நோய் நீங்கி சிவனின் தலையிலேயே இடம் பெற்றார். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவன், தனது முடிமேல் சூடிக்கொண்டு சந்திரசேகரர் என்ற பெயரை பெற்றார்.

பெண்கள் சௌபாக்கியத்துடன் திகழவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படவும், நோய்நொடிகள் இல்லாமல் இருக்கவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

இத்தகை சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை சோமவாரத்தில் சிவப்ருமானை வேண்டி நடைபெறும் ஹோமங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்று வழிபட்டால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியமடையும், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், மணப்பேறு, மகப்பேறு, வாக்கு, கல்வி, செல்வம் யாவும் கிட்டும், நோய்கள் நீங்கும், அகால மரண பயமின்மை என எல்லா நற்பலன்களையும் அடையலாம்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images