வாலாஜா தன்வந்திரி பீடத்தில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
தமிழகத்தில் கொரோனாவின் 2 ஆவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் உலக நலன்கருதியும் கொரோணா நோய் நாட்டை விட்டு அகலவும் 14.04.2021 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள், சரீர விலகலை பின்பற்றாதவர்கள், முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு பீடத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும். பக்தர்கள் பீடம் வளாகத்துக்குள் அசுத்தம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் கால்களை நீரில் சுத்தம் செய்து, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர், உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகு, நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அணிந்து வரும் காலணிகளை காலணி பாதுகாப்பு இடத்தில் தாங்களே சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்ல வேண்டும் எனவும், பீடம் வெளிப்புறம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் சரீர விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோயில் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சமூக விலகல் மற்றும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க கேட்டு கொள்கிறோம் மேலும் சுவாமி சிலைகளை பக்தர்கள் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும். தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இயல்பு நிலை திரும்பும் வரை இடங்களில் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு நடைமுறையின் படியும்,ஸ்வாமிகளின் அருளனைப்படியும் ஹோம பூஜைகள் நடைபெறும். அதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகள் முடிந்த பின்னர் சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்து முடிந்த பின்னர் பக்தர்கள் பீடம் வளாகத்தில் தங்கி இளைப்பாற அனுமதி இல்லை. அதேபோல் 5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணையான நோய்களை கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் போன்றவர்கள் தன்வந்த்ரி பீடத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்” பக்தர்கள் கோரோன நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.