Special Saraswathi Homam With Danvantri Homam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் செலுத்தவும், விளயாட்டில் ஏற்படும் ஆர்வம் தேர்வு முடியும் வரை தள்ளி வைக்கவும், நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், சரஸ்வதி ஹோமமும் நடைபெற்றது.

சரஸ்வதி ஹோமம் புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெற்று வருகின்ற பொது மற்றும் ஆண்டு தேர்வில் பங்கு பெற்று, அதிக மதிபெண்கள் பெற்று, கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி தேவியை வேண்டி சரஸ்வதி ஹோமமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. ஆயுள் ஆரோக்யம் வேண்டியும், தேர்வு பயம் நீங்கவும், தேர்வுகால ஜுரம் அகலவும், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் ஹோமரக்ஷை, குங்குமம், அபிஷேக தேன், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்கள் வழங்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images