வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று19.02.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் என மூன்று யாகங்கள் நடைபெற்றது.
திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், குடும்பக்ஷேமம் பெறவும், உத்யோகத்தில் நன்மைகள் பெறவும் ஸ்ரீ குருபகவானுடைய அருள் மிகவும் முக்கியம். குருபகவான் பரிபூரண அருள் வேண்டியும், கல்வியில்,ஆரோக்கியத்தில், வசதி வாய்ப்புகளில், வேலை வாய்ப்பில், சொந்த வீடு வாங்குவதில், சொகுசு வாகனங்கள் வாங்குவதில், ஆன்மிக ஈடுபாட்டில், புனிதப் பயணம், சுற்றுலாப் பயணம் மற்றும் அயல்நாட்டு பயணங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டியும், குழந்தைசெல்வம் வேண்டியும், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கவும், மகேஸ்வரனையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் வேண்டி கல்யாண வரத்திற்கும் பிள்ளை வரத்திற்கும் இந்த யாகத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று பௌர்ணமியில் நடைபெறும் சிறப்பு அன்னதானத்தில் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version