Special Yagas with 108 Sumangali Puja

திருமணமாகி கணவனுடன் கணவரின் ஆசிகளுடன் வாழும் பெண்களை சுமங்கலி என்று அழைத்து மகிழ்வார்கள். இறைவனின் மலர் கமல பாதங்களை சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்தப் பூஜையின் மூலம் அவர்களின் ஆசிகள் கிடைத்து குடும்பத்தில் பல்வேறு விதமான சுபகாரியங்கள் நடைபெற வழி பிறக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு திருமணம், கிரக பிரவேசம், போன்ற சுப நிகழ்ச்சி சமயங்களில் இந்த வைபம் நடத்தப்படுகின்றது. இந்த வைபவத்தில் ஆண்கள் பங்கு கொள்ள இயலாது மற்றும் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் இதனை நடத்தக் கூடாது. இந்தப் பூஜையின் புனிதம் கருதி வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணிகள் இதற்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்ய வேண்டும். கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டி இறைவனடி சேர்ந்த குடும்பத்தின் பெண் மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெற இந்த பூஜை நடத்தப்படுகின்றது.

சுமங்கலிப் பூஜையின் மகத்துவம் :

சுமங்கலிப் பூஜை, சில மரபு முறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் முக்கியமான மற்றும் புனிதமான விழாவாகும். இந்தப் பூஜையை நடத்துவதற்கு குடும்ப சம்பிரதாயத்தை பின்பற்றி நடத்த வேண்டும். 3,5, 7, மற்றும் 9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கேற்ப சுமங்கலிகளை தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி செய்வார்கள். தன்வந்திரி பீடத்தில் “யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆசிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்தியை முன்னிட்டும் மேற்கண்ட சுமங்கலி பூஜை 108 சுமங்கலிகளை கொண்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 14.12.2018 வெள்ளிக்கிழமை 14 ஆம் ஆண்டு சுமங்கலி பூஜை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் சுமங்கலிகளுக்கு பாத பூஜை செய்து புடவை, ரவிக்கை துண்டு, மஞ்சள், குங்குமம், புஷ்பம், வெற்றிலை பாக்கு, பழம், சோப்பு, சீப்பு, கண்ணாடி, கண் மை, வளையல், இனிப்பு, போன்ற சௌபாக்ய பொருட்கள் வழங்கி அவ்வமையம் பீடத்திற்கு வருகை புரியும் பக்தர்களும், தன்வந்திரி குடும்பத்தினர்களும் அவரவர் மூதாதிரையர்களை மனதில் நினைத்து அனைத்து சங்கடங்களும் நீங்கவேண்டி பிரார்த்தித்து ஆசிர்வாதம் பெறும் வைபவம் நடைபெற உள்ளது. மேற்கண்ட வைபவத்தில் பங்கேற்கும் 108 சுமங்கலிகளுக்கு சௌபாக்ய பொருட்களும் அன்னபிரசாதமும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இவ்வைபவத்தை முன்னிட்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திரிக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து ஸ்ரீ காயத்ரீ ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்பரக்ஷாம்பிகை யாகங்கள் நடைபெற உள்ளது.

சுமங்கலிபூஜையின் சிறப்பு :

அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம் மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகு ம். சுவாஷினி என்பதே சுமங்கலி யாக மாறியது எனலாம். கணவ னோடு கூடி இல்லறத்தை நல்லற மாக நடத்துகின்ற பெண்களே சும ங்கலி என்று அழைக்கப்படுவார்கள்.

நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடு வதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறையை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற்றுகருத்து இல்லை அவளை வழி படுவதும் அன்னையை வழிபடுவ தும் ஒன்றுதான்.பொதுவாக சுமங் கலி பூஜை நவராத்திரி தினங்களி ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒரு வீட்டில் திருமணம் ஆகாமல் நெடுநாட்களாக ஒருகன்னி பெண் இருந்தால் அவளுக்கான தோஷத்தை நீக்குவதற்கும் சுமங்கலி பூஜை நடத்தலாம். ஆலயங்களில் மகாலட்சுமி ஹோமம் செய்து முடித்த பிறகு சுமங்கலிபூஜை நடத்துவது வழக்கம். சுமங்கலி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 15.12.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 108 கலசங்களில், 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு ஆராதனை வைபவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பிரசாதம் வழம்க்கப்பட உள்ளது. அனைவரும் வருக, இறை அருளுடன் குருஅருள் பெறுக. சுமங்கலிபூஜை மற்றும் யாகங்களில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்களும், கைங்கரியத்தில் ஈடுபட விருப்பமுள்ளவர்களும் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images