வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சென்ற 13.11.2016 ஞாயிற்று கிழமை முதல் தன்வந்திரி பெருமாளுக்கும் இதர பரிவார தெய்வங்களுக்கும் சன்மத முறைப்படி ஸம்வஷ்சர அபிஷேகம் சப்தாஹம்மாக நடைபெறுகிறது.நேற்று காணாபத்தியம் முறைப்படி ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெற்றது. இன்று கௌமார கடவுளான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமங்களும் நவகலச அபிஷேகமும் த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம்மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த ஹோமத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை செம்பாக்கம் ஸ்ரீபாலாசமஸ்தானத்தின் பீடாதிபதி இளம் பூர்ணசிவம் பூர்ணாஹீதியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த தகவலைதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version