வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வன்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வருகிற21.07.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை தத்தாத்ரேயர் ஹோமத்துடன் ஸ்ரீ பிரம்மா ஹோமம் நடைபெறுகிறது.
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மா, படைப்புக் கடவுளாக போற்றப்படுகிறார். நான்முகன், அயன், கஞ்சன்,விரிஞ்சி உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் இவருக்கு உண்டு. விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து தோன்றியவர் பிரம்மன். இவரது மனைவி கல்விக் கடவுளான சரஸ்வதி. பிரம்மனின் உடன்பிறந்தவளாக மகாலட்சுமியைச் சொல்வார்கள். பிரம்மதேவருக்கு சனகர், சனத்குமாரர், சனத்சுஜாதர், சனந்தனர், வசிஷ்டர், புலகர், புலஸ்தியர்,பிருகு, தட்சிப்பிரஜாபதி, ஆங்கிரஸ், மரீசி, அத்ரி, நாரதர் ஆகிய மகன்கள் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. உலக உயிர்களை படைக்கும் பிரம்மன், தனது பிரம்ம தண்டம் கொண்டு அனைவரின் தலையெழுத்தையும் எழுதுகிறார். அன்னப் பறவையை வாகனமாக கொண்ட பிரம்மனின் இருப்பிடம் சத்தியலோகம் ஆகும்.
நம்முடைய இந்து மதம் என்பது கடவுளிடம் நம்பிக்கை கொண்ட மாபெரும் மதமாகும். கடவுள்களை பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் வழக்கம் இந்து மதத்தில் உள்ளது. இந்து மத கடவுள்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளாக உள்ளனர்.
படைக்கும் கடவுளான பிரம்மர் முதல் கடவுளாக இருக்கிறார். இதில் பிரம்மர் படைக்கும் கடவுளாகவும், விஷ்ணு பகவான் காக்கும் கடவுளாகவும், சிவபெருமான் அழிக்கும் கடவுளாகவும் இருக்கிறார்கள்.
பிரம்மன்
பிரம்மர் என்ற பெயருக்கு சம்ஸ்க்ருதத்தில் வளர்ச்சி, விரிவு மற்றும் படைப்பு என்பது பொருளாகும். இந்த வழியில், பிரம்மர் படைக்கும் கடவுளாக அறியப்படுகிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும், அதில் வாழும் எல்லா உயிர்களையும் பிரம்மர் படைத்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்தவராகவும்,இயக்குபவராகவும் பிரம்மர் இருக்கிறார். தேவி சரஸ்வதி, பிரம்ம தேவரின் மனைவி ஆவார். சரஸ்வதி தேவி,அறிவு மற்றும் ஞானத்தின் கடவுளாக விளங்குகிறார்.
பிரம்மரின் தோற்றம்
பாற்கடலில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு பகவானின் தொப்புளில் மலர்ந்த தாமரையில் இருந்து பிறந்தவர் பிரம்ம தேவர். விஷ்ணுவின் தொப்புளில் (நாபி) இருந்து தோன்றியதால் இவரை "நாபிஜன்ம" என்றும் அழைப்பார்கள் என்று இந்து மத கோட்பாடு தெரிவிக்கிறது. நாராயணனின் தாமரையிலிருந்து வளர்ந்து வரும் பிரம்மா என்பது பிரபஞ்சத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பெயர். அவர் வானுலக மற்றும் தெய்வீக மாந்தர்களின் சின்னமாகப் போற்றப்படுபவர்.
நாராயணன்
பிரபஞ்சத்தின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் (பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவன்) அழிக்க முடியாதவர்கள் என்றும் அவர்கள் முழு பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றுக்கு பொறுப்பு ஏற்பவர்கள் என்றும் வேதம் புருஷ சுகட்டத்தில் கூறுகிறது. "நாராயண" என்பது உபநிஷதத்தில் கொடுக்கப்பட்ட சமஸ்கிருத பெயர் ஆகும், இதற்கு முதன்மைக் கடவுள் என்ற பொருள் ஆகும். இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு வடிவங்களை ஒவ்வொரு அவதாரம் எடுத்து படைத்து, பின் மீண்டும் நாராயணனுக்குள் கரைந்து விடுவார் பிரம்மர். நாராயணர் என்பவர் படைக்கவும் முடியாத அழிக்கவும் முடியாத பரம்பொருள் ஆவார். இறையியல் படி, பிரம்மர் ஒரு சுயம்பு. அண்டவியல்படி பிரம்மரே விஸ்வகர்மா (பிரபஞ்சத்தில் தலைவர்) மற்றும் இவரே விதி (தொடக்கம்).
பிரம்ம தேவரின் நான்கு முகங்களும் நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாமம் மற்றும் அதர்வனம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பிரம்மர் அணிந்திருக்கும் விலங்கு தோல் தீவிரத்தைக் குறிக்கிறது. அவருடைய நான்கு கைகளில் ஒரு கையில் கமண்டலத்தைக் கொண்டிருக்கிறார். அது சந்நியாசத்தின் அல்லது துறவறத்தின் சின்னமாகும்.
உலக வாழ்க்கை என்பது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற மூன்று கொள்கையின் விளக்கமாகும். இந்த மூன்று கொள்கைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது. அழித்தல், படைத்தல் மற்றும் காத்தல் ஆகியவை ஒன்றாக இருக்கிறது. மூன்று முகங்களும் அவர்களின் மூன்று கொள்கைகளை பறைசாற்றும் விதமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஆலயம் அமைக்கப்பட்டு அவ்வப்பொழுது தத்த ஹோமங்கள் நடைபெற்று வருகிறது.
பிரம்மா ஹோமத்தில் பங்கேற்று பிரம்ம தேவனை வழிபடுவதின் மூலம் அவர் நம் வாழ்வில் உள்ளே சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு தீர்வை கொடுப்பார், வேதங்களில் சிறந்து விளங்கலாம். ஆயுள், ஆரோக்கியம் போன்றவை நல்ல முறையில் அமையும். எளிதில் அருள்புரிபவரும், வரங்களைத் தருபவருமான பிரம்மதேவர் அனைவரையும் நலமுடன் வாழ வைப்பார், நம் தலையெழுத்தை மாற்றி நல்வாழ்வு அருள்வார்.
மேலும் இந்த யாக பூஜையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று திருவருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.