வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் இன்று 23.09.2016 காலை சொர்ண பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர் சகித ஸ்ரீ கால பைரவருக்கும், சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த ஹோமத்தில், விஷேசமான மூலிகைகள், பட்டு வஸ்த்ரங்கள், சிவப்பு நிற பழங்கள், பூக்களால் பூஜை செய்யப்பட்டது. மேலும், ஸ்ரீ பைரவருக்கு இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணை, தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசுநெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கொண்டு பஞ்சதீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது.
இதில் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடவும், கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகவும், வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறவும், வழக்கு, வியாஜ்யங்களில் வெற்றி பெறவும், மேலை நாடுகளுக்குச் செல்ல ஏற்படும் தடைகள் அகலவும் இந்த சிறப்பு ஹோமத்தில் அனைவரும் ப்ரார்த்தனை செய்தனர். ஸ்ரீ பைரவரின் அருளைப் பெற திரளான பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version