Sri Gayathri Homam was Held

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 12.06.2020 வெள்ளிக்கிழமை சப்தமி திதி முன்னிட்டு காலை மாலை இரு வேலையும் ஸ்ரீ காயத்ரி தேவி ஹோமம் நடைபெற்றது.

காயத்ரி ஹோமத்தில் கீழ்கண்ட பிரார்த்தனை:

இந்த யாகத்தில் கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர கிடைக்க வேண்டியும், அஷ்ட ஐஸ்வர்யங்கள் வேண்டியும், பாவங்களை போக்கி புண்ணியங்கள் அளிக்க வேண்டியும், நீண்ட ஆயுள், நிகரில்லா செல்வத்துடன் புகழ் கிடைக்கவும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், திறமைகேற்ற வேலை கிடைக்கவும், மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் சகல காரிய வெற்றியும், நிலம் வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம் மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்க்கை வேண்டியும் குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகள் நீங்கவும் சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் உலக மக்களுக்கு கிடைக்க மேற்கண்ட காயத்ரி ஹோமத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இதனை தொடார்ந்து 4அடி உயரம் உள்ள பஞ்சலோக காயத்ரிதேவிக்கும் மா மேருவிற்கும் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் அரசு பிறப்பித்துள்ள பொது ஊரடங்கு உத்தரவு முன்னிட்டு பொது மக்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images