Sri Hanuman Jayanti Festival

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நாளை 05.01.2019 சனிக்கிழமை அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் 1.00 மணி வரை ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் 108 கலச மூலிகை தேன் திருமஞ்சனமும், வெண்ணெய், 1008 வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலை 11.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள யக்ஞசொரூபிணி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு 1000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது. மற்றும் மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனி கிரக தோஷ நிவர்த்திக்காக சனி சாந்தி ஹோமம் நடைபெற்று காலசக்கிர பூஜை நடைபெற உள்ளது.

ஹனுமன் ஜெயந்தி சிறப்பு :

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.

சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா” என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம். அனுமன் அவதார நாளில் தன்வந்திரி பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது.

ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். இந்த தகவலை ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த புனித நாளில் நடைபெறும் சனி சாந்தி ஹோமம், ப்ரத்யங்கிரா யாகம், ஹனுமந்த யாகம் மற்றும் 108 கலச மூலிகை தேன் அபிஷேகம் போன்ற விசேஷ வைபவங்களில் கலந்துகொண்டு பித்ருக்கள் ஆசியுடன் இறைவனின் அனுக்கிரகம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இவ்வைபவத்திற்கு தேவையான தேன், நெய், பழங்கள், புஷ்பங்கள், வெண்ணெய், இனிப்பு பண்டங்கள், வஸ்திரங்கள், பூ மாலைகள், வெற்றிலை மாலை, பழமாலை, துளசி மாலை, மூலிகைகள், மளிகை பொருட்கள் அளித்து பகவத் கைங்கரியத்தில் அனைவரும் பங்கேற்று பயன்பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images