SRI LAKSHMI NARASHIMAR LAKSHA JAPA SAHASRA MOOLA MANTHRA HOMAM (14.5.2022 & 15.5.2022)

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில்

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் லட்ச ஜப தச சஹஸ்சர மூலமந்திர ஹோமம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின மேல் ஸ்ரீ ல‌ஷ்மி நரசிம்மர் அருள்பாலிக்கும் சன்னதியை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமைத்துள்ளார். ஸ்வாமிகளின் அருளானைப்படி ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சன்னதியில் வருகிற 14.05.2022 மற்றும் 15.05.2022 தேதிகளில் உலக நலன் கருதி ஸ்ரீ லஷ்மிநரசிம்மரை வேண்டி லட்ச ஜப ஹோமம் நடைபெறுவதை முன்னிட்டு காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹவாசனம், வேத பாராயணம், 108 வகையான மூலிகளைகளால் மூல மந்திர ஹோமம், ஸ்வாதி நக்‌ஷத்திர ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம், ஸ்ரீ அனுமந் ஹோமம், ஸ்ரீ கருடர் ஹோமம், ஸ்ரீ மன்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று மஹா பூர்னாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், தாமரை மலர்கள், பல்வேறு புஷ்பங்கள், பசு, நெய், தேன், வாசனாதி திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள் மற்றும் மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன.

எம்பெருமான் ஸ்ரீ மஹாவிஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அவதார மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரின் திருநட்சத்திரம் ஸ்வாதியாகும். வேதத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் ஸ்வாதி நட்சத்திரம் மிகவும் உயர்வாகக் கூறப்படுகிறது. கடலில் சிற்பிக்குள் முத்து தோன்றுவதும் இந்த நட்சத்திரத்தில் தான் என்று கூறுவர்.

லட்சுமி நரசிம்ம ஹோமத்தில் பங்குகொள்வதின் மூலம் தம்பதிகள் மற்றும் பிற உறவினர்களுடன் ஏற்பட்டிருக்கின்ற கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். காரியங்களில் தடை, தாமதங்கள் இல்லாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றிகளை பெற முடியும். சொந்த வீடு, வாகனம் மற்றும் மிகுதியான செல்வச் சேர்க்கை போன்ற பாக்கியங்களை பெறலாம்.

வசிக்கின்ற வீடுகளில் ஏற்படும் துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் நீங்கும், மாந்திரீக ஏவல்கள் போன்றவற்றின் தீய அதிர்வுகள் முற்றிலும் நீங்கி நன்மையான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஓடி ஒழிவார்கள். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத  கடன் பிரச்சனையும் விரைவில் தீருவதற்கான வழிகள் கிடைக்கும்.

ஸ்வாதி நட்சத்திரத்தின் சிறப்பு

பெரிய பெரிய மகான்களுடனும், ஆசார்யர்களுடனும் தொடர்புடையது இந்த நட்சத்திரம். "வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப்போல் நான் செல்வேன்' என்று அனுமன் கூறுவதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சப்தரிஷி மண்டலத்தின் தென்கிழக்கில் ஓர் அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது. அதில் அதிபிரகாசமாகத் தெரியும் சுவாதி இருளை தன் ஒளிக்கரணங்களால் அகற்றிவிடும் தன்மை படைத்தது. அராபியர்கள் இதை "சுவர்க்கத்தின் காவலன்' என வர்ணிக்கின்றனர். இவ்வாறெல்லாம் புகழுக்கும் பெருமைக்கும் உரித்தான சுவாதி நட்சத்திரம் கூடிய தினத்தில் செய்யப்படுவது ஸ்வாதி ஹோமம். ஸ்ரீ நரசிம்மசுவாமியை பிரார்த்தித்து செய்யப்படுவது மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் என்கிற ஸ்வாதி ஹோமமாகும். இந்த ஹோமத்தின் பலனாக எல்லாவிதமான துன்பங்களும், துயரங்களும், சோதனைகளும் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

தொடர்ந்து மூலவர் ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அரிசி மாவு போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம், செல்: 9443330203. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images