வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வருகிற 01.02.2019 காலை 10.00 மணியளவில், மரணபயம் போக்கி மங்கள வாழ்வு தரும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் மலராபிஷேகம் நடைபெறுகிறது.
தை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்பாளை போற்றி வழிபடும் சிறப்பு நாளாக கருதப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியில் வரும் ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வருகிற 01.02.2019 தை மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள மஹிஷாசுர மர்த்தினிக்கு மஞ்சள், குங்குமம், பால், சந்தனம், பன்னீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து பலவகை புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து அம்பாளுக்கு உகந்த செவ்வரளி மாலை, எலுமிச்சம் பழம் மாலை சார்த்தி, நெய் தீபமேற்றி வழிபட்டால் வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும். மேலும் கூடுதல் பலனைத்தரும் என்கிறார் “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள்..
அம்பாளுக்கு உகந்த சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஏதேனும் ஒரு பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு பக்தர்களுக்கு நிவேதனமாக வழங்கி வந்தால் தனம் தான்யம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக அன்னைக்கு மாவிளக்கு ஏற்றி வைப்பது மிகவும் விசேஷம். இதனால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்.
மேற்கண்ட தினத்தில் நடைபெறும் லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீசுக்தம், கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணத்திலும், அன்று நடைபெறும் யாகத்திலும் கலந்துகொண்டு, பிரார்த்தனை செய்து, வாழ்வில் எண்ணற்ற பலன்களை பெற்று, அம்பாளின் அருளுடன் அனைத்து வளங்களும் பெறலாம்.
இந்த பூஜையிலும், ஹோமத்திலும் புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version